Pages

Saturday, October 11, 2014

வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்

 1) வரலாறு என்றால் என்ன? 

* கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே முடிவற்ற பேச்சு 

2) வரலாற்று பாட பரப்பினுள் அடங்கும் செயற்பாடுகள் எவை?

*அரசியல், பொருளாதாரம், சமயம், கலாசாரம், இலக்கியம், கலை, சட்டம், விஞ்ஞானம் 

3) ஜீ. எம் திரவிலியன் அவர்களின் வரலாற்று கருத்தை கூறுக?

*வரலாறு என்பது பல அறிவுத் துறைகள் கூடி வாழும் இல்லம் 
*ஒரு தனித்த பொருள் அல்ல;மாறாக எல்லாவித பொருள்கள் பற்றிய இயல்புகளும், துறைகளும் வாழ்கின்ற ஒரு மாளிகை 

4)  வரலாறு கற்பதன் பயன்கள் எவை?

*சமூகம் மற்றும் உலகம் பற்றிய தெளிவை பெறல்
*இறந்த காலத்தின் ஊடக நிகழ்காலத்தை விளங்கி எதிர்காலத்தை கட்டியெலுப்புதல் 
*தேசியத்துவத்தை அறிந்து கொள்ளல் 
*ஏனைய கலாசாரங்களை மதித்தல் 
*பல்வேறு கருத்துக்களை சகித்தல் 
*தர்க்க ரீதியான சிந்தனைகள் வளர்ச்சி அடைதல்

 

 5) இம் மூலாதாரங்கள் எத்தனை வகை? அவை எவை?

*2 வகை படும்
*இலக்கிய மூலாதாரம், தொல் பொருள் மூலாதாரம்




6) இலங்கை வாலாற்றில் முதலாவது  எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரம் எது?

*தீபவம்சம் 

7) இது எம்மன்னர் வரை கூறப்பட்டுள்ளது?

*மகாசேனன் 

8)மகாவம்சம் யாரால் எழுதப்பட்டது?

*மகாநாம தேரரால் 

9) இதன் இரண்டாம் பாகம் எவ்வாறு அழைகப்படுகிறது?

*சூளவம்சம் 

10) இந்தியாவில் நிலவிய பௌத்த சமயம், இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்டமை அடங்கிய நூல் எது?

*சம்ந்தபாசதிகாவ 

11) புனித வெள்ளரசுமரத்தினதும் தந்ததாதுவின் வரலாற்றை கூறும் நூல்களை முறையே தருக?

*மகபோதிவம்சம் 
*தாட வம்சம் 

12)இலங்கை ஆதிகாலம் தொட்டே தொடர்பு வைத்திருந்த நாடுகளை குறிப்பிடுக?

*இந்தியா,சீனா, பர்மா, மலாயா, பாரசீகம், அரேபியா, கிரேக்கம், உரோம்

13) அரிஸ்டாடில் இலங்கை பற்றிய நூல் எது?

*டிமுண்டோ

14) இண்டிகா நூல யாரால் எழுதப்பட்டது?

*கிரேக்க நாட்டவரான மெகஸ்தனீஸ் 

15)உரோம் நாட்டவரான பிளினியில் எழுதப்பட்ட நூலையும் அதில் உள்ள விடயங்களையும் தருக?

 *நேச்சுராளிஸ் ஹிஸ்டோரியா 
*இலங்கையின் பொருளாதார விடயம் 

16)பெரிப்லஸ் ஓப் எரித்திரியன் சீ  நூலை எழுத்யவரினதும் அஹில் உள்ள விடயங்களையும் தருக?

*பெரிப்லஸ் மாரிஸ் 
*இலங்கையில் முத்து, மாணிக்கம், பரித்தித்துணி, எனும் வர்த்தக பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது  

17) தொலமி எந்நூலில் இலங்கையை வேறு பெயர் சூடி குறிப்பிட்டு உள்ளார்? அது எப்பெயர்?

*பூகோள சாஸ்திரப் பிரவேசம் 
*தப்றபேன் 

18)புரோகொபியஸ் மற்றும் கோஸ்மஸ் அவர்களின் நூல்களை தருக? அதில யாது கூறப்பட்டுள்ளது?

*பாரசீக யுத்தம் , டொபோ கிறபியா கிறிஸ்டியானா 
*இலங்கை வர்த்தக மையமாக விளங்கியதாக 

19) இலங்கையை "செரண்டிப்" என கூறியவர் யார்?

*அரபியாரான சுலைமான்

20) அபூசைத் எனும் எழுத்தாளர் எழுதிய நூல் எது?

*சில் சிலாத் அல் தவாரிங்

21) இலங்கை பற்றி எழுதியுள்ள சீன பிக்கு இருவரின்  பெயரையும் தருக?

*பாஹியன் 
*ஹியுங்சாங் 

22) இலங்கை பற்றி எழுதியுள்ள சீன இனத்தவர்களை தருக?

*ஹூ-ஏ -சோ 
*சா-ஓ-ஜு-குவா 

23) தொல்பொருள் மூலாதாரம் எத்தனை வகை படும் அவை எவை?

கல்வெட்டு 
*கல்வெட்டுக்கள் 
*நாணயங்கள் 
*சிதைவுகள் 

24) யாரின் வருகைக்கு பின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன?


*மஹிந்த தேரரின் பின் 

25) ஆரம்ப கால கல்வெகட்டுக்கள் எவ் எழுத்தினில் எழுதப்பட்டது?

*பிராமிய எழுத்து மூலம் 


1 comments:

  1. 888sport - DrmCD
    888Sport is the fastest, 충청남도 출장샵 and fastest, online gambling company in the world. In fact, it's one of the 거제 출장샵 most comprehensive 동해 출장샵 betting 공주 출장마사지 sites in Europe. 원주 출장샵 It provides a wide

    ReplyDelete